லங்கா ரி10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர், ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டில் இலங்கையின் விளையாட்டு பொலிஸ் பிரிவினரால் நேற்று (12) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட காலி மார்வெல்ஸின் உரிமையாளரான இந்தியப் பிரஜை பிரேம் தக்கர், டிசம்பர் 16 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

மேட்ச் பிக்சிங் தொடர்பான சந்தேகத்திற்கிடமான சலுகையுடன் அணுகப்பட்டதாகக் கூறி வெளிநாட்டு வீரர் ஒருவர் முறைப்பாடு அளித்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.

ஆரம்ப லங்கா ரி10 போட்டியின் நேர்மை குறித்து கவலைகளை எழுப்பிய இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here