இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் சுலபமாகக் கடல்கடந்த இந்தியப் பிரஜை எனும் அந்தஸ்தைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்துடன், தங்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றது என்பதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் இந்தியப் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், 13ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.








