2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் செப்டம்பர் 17 வரை T-56 ரக துப்பாக்கிகள் 14, பிஸ்டல்கள் 33, ரிவால்வர்கள் 25 உட்பட மொத்தம் 891 துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம் T-56 ரக துப்பாக்கிகள் 74 உட்பட மொத்தம் 2,404 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை 35 ஒழுங்கமைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் உட்பட மொத்தம் 40 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த துப்பாக்கிச் சூடுகள் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here