நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் அடங்குவர் என ஊடகங்களை சந்தித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் F.U வூட்லர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2024 ஆம் ஆண்டில் இவ்வாறான 595 மரணங்கள் பதிவாகின,அவற்றில் 510 ஆண்கள் மற்றும் 85 பெண்கள் அடங்குவர். 2025 ஆம் ஆண்டில் 376 உயிரிழப்புக்கள் பதிவாகின, அவற்றில் 309 ஆண்கள் மற்றும் 67 பெண்கள் அடங்குவர்.
இதற்கமைய 2024 முதல் 2026 வரை மொத்தமாக 1,093 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் ஆவர்.
எனவே விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலத்தில் பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.








