பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த ஹெலிகொப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், பிராந்தியத் தலைநகருக்கு அருகே அது விபத்துக்குள்ளானதாகவும் பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளதோடு. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் (ஜூன் 5)தடைசெய்யப்பட்ட பல்வேறு குழுக்களின் கூட்டணியான கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்திருந்த தொடர் போராட்டம் மற்றும் வேலைநிறுத்திற்கு இடையே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எனினும்,போராட்டத்திற்கும் ஹெலிகொப்டர் விபத்திற்கும் இடையே எந்தத் தொடர்பும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








