நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய ,சப்ரகமுவ,வடமத்திய, தென், கிழக்கு மற்றும் ஊவா   மாகாணங்களின் சில இடங்களில் 75 mm கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய ,சப்ரகமுவ, வடமத்திய, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here