இரண்டு இலட்சத்து 15 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆசனிக் இரசாயன விசம் கலந்த ரின்மீன் தொகை ஒருகொடவத்தை சுங்க களஞ்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கண்காணிப்பு விஜயம் இன்று சுற்றாடல், வனஜீவராசிகள், வனவளங்கள், நீரியல் வளம், பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பீ. ஆர்.பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
இந்த விச ரின்மீன் தொகையை இங்கு அழிக்காமல், அவற்றை மீண்டும் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.








