பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 1ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில், தமது 2ஆம் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது, 3 விக்கட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது.
முன்னதாக 1ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அத்துடன், பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டன.







