கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (08/03/2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த 7 பேர் கொண்ட குழு ஒன்று அங்கு இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் இரவுநேர களியாட்ட விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களையும் உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here