தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆர். ஜி . புஷ்பதேவ என்ற 68 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மாத்தளை, வில்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட குழு ஒன்று மது போதையில் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, உயிரிழந்த நபருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, இந்த தகராறு எல்லை மீறியதில் சந்தேக நபர்கள், உயிரிழந்த நபரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here