கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று (11.10) காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 18 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

அதன்படி, இன்று காலை 8.15 மணியளவில் கொழும்பு – கண்டி வீதியில் உதுவான்கந்த, வலகடயாவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான இரண்டு பேருந்துகளும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கேகாலையில் இருந்து மாவனெல்ல நோக்கி சென்று கொண்டிருந்த மற்றுமொரு பேருந்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாணந்துறையில் இருந்து வந்த பேருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here