டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், ரஷ்யாவிடம் இருந்து மசகெண்ணை மற்றும் பெட்ரோலியப் பொருட்களை கொள்வனவு செய்ய விதிக்கப்பட்ட தடைகளுக்கான விலக்குரிமையை (Sanctions Waiver) மேலும் சுமார் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.
இந்த விலக்குரிமை மே 16, 2026 வரை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ள அமரிக்க நிர்வாகம் கடலில் ஏற்கனவே கப்பல்களில் உள்ள ரஷ்ய எண்ணெய்க்கு மட்டுமே இது பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
கடநத ஏப்ரல் 11 ஆம் திகதியுடன் முந்தைய 30 நாள் விலக்குரிமை முடிவடைந்த நிலையில், தற்போது விலக்குரிமை நீடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலியப் போரால் ஈரானில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் இடையூறு ஏற்படுவதைத் தடுக்கவும், மசகு எண்ணெய் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இந்தியா போன்ற நாடுகளுக்கு ரஷ்ய மசகு எண்ணெயைத் தொடர்ந்து இறக்குமதி செய்ய தற்காலிக நிவாரணம் அளிக்கிறது.
முன்னதாக, ஏப்ரல் 15, 2026 அன்று, இந்த விலக்குரிமை நீட்டிக்கப்படாது என்று அமெரிக்க திறைசேரி செயலர் ஸ்காட் பெசன்ட் கூறியிருந்தார், எனினும் நேற்று (17) அன்று இந்த முடிவை நிர்வாகம் மாற்றிக்கொண்டுள்ளது.








