தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்று வந்த இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டி நேற்றைய தினம் (17.12.2023) சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

6 போட்டியாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிச் சுற்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி. கில்மிஷா வெற்றிவாகை சூடியுள்ளார்.

குறித்த இசை நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து அசானி மற்றும் கில்மிஷா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

அதில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அசானி தவற விட்டிருந்தார். எனினும் மலையக மக்களின் அடையாளமாக அவர் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இரண்டாம் இடத்தை ருத்ரேஷ் குமாரும் மூன்றாம் இடத்தை சஞ்சனாவும் பெற்றிருந்தனர்.

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் போட்டி நிகழ்வொன்றில் கந்து கொண்டு முதல் இடத்தைப் பெற்ற இலங்கையைர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கிக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here