அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம், தற்போது நடைமுறையில் உள்ள 10% கட்டண காலம் முடிவடைந்ததை அடுத்து, இலங்கை உட்பட 60 வர்த்தக பங்காளி நாடுகளுக்கு 10% மற்றும் 12.5% என்ற விகிதத்தில் புதிய இறக்குமதி வரிகளை விதிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கமைய, இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி விதிப்பிற்கான முக்கிய காரணம், அந்த நாடுகளில் கட்டாய உழைப்பை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியை தடை செய்யும் சட்டங்களை முறையாக அமுல்படுத்தாமை மற்றும் அது தொடர்பில் கடைபிடிக்கப்படும் தளர்வான கொள்கை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த வரியானது இலங்கையின் ஏற்றுமதிகள், குறிப்பாக ஆடை மற்றும் தேயிலை துறைகளில் தாக்கம் செலுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.







