ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இவ்வாறு கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 100.76 டொலராக ஆக பதிவாகியுள்ளது. இது 7.11 வீத அதிகரிப்பாகும்.

WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை $91.76 ஆக பதிவாகியுள்ளது. இது 5.68%* வளர்ச்சியாகும்.

மர்பன் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை $105.40 வரை அதிகரித்துள்ளது. இது 17.80% அதிகரிப்பாகும்.

இந்த விலை மட்டம் கடந்த மே மாதத்திற்கு பின்னர் முதல் முறையாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here