உற்பத்தித் துறைக்கான இலங்கை கொள்முதல் மேலாளர்கள் குறியீடு ஜனவரி மாதத்தில் 59.0 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் இது உற்பத்தி நடவடிக்கைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகிறதென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சேவைகள் துறைக்கான இலங்கை கொள்முதல் மேலாளர்கள் குறியீடு ஜனவரி மாதத்தில் 58.5 ஆக பதிவாகியுள்ளது, இது சேவைகள் செயல்பாட்டில் சிறிது அதிகரித்துள்ளதென குறிப்பிட்டுள்ளது.

உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு அனைத்து துணைக் குறிகாட்டிகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதாகவும், ஜனவரி மாதத்தில் ஆடை உற்பத்தித் துறையில் பலர் தங்கள் செயல்பாடுகளை அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி கூறுகிறது.

புதிய ஓடர்கள், உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் மொத்த விலை துணை குறியீடுகளில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணம் என்றும், டிசம்பரில் பண்டிகை காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து உணவு மற்றும் குளிர்ப்பான உற்பத்தித் துறை தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டது என்று தெரிவித்துள்ளது.

சேவைத் துறைக்கான கடன் அதிகரிப்பின் காரணமாக நிதிச் சேவைகள் தொடர்பான வணிக நடவடிக்கைகள் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகின்றன என்று இலங்கை மத்திய வங்கி மேலும் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here