பூமியில் பெரிய மற்றும் சிறிய நாடுகள் என ஏகப்பட்ட நாடுகள் உள்ளன.

அதில் இலங்கை போன்ற சிறிய நாடுகள் தான் அதிகம் உள்ளன.

அந்த வரிசையில் உலகிலேயே மிக சிறிய நாடு என பெயர் பெற்றும் தனித்து விளங்கும் நாடு தான் மொலோசியா.

அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த சிறிய நாட்டில் வெறும் 33 மக்களை மட்டுமே வாழ்கிறார்கள்.

மற்ற எந்த நாட்டினராலும் அங்கிகரிக்கப்படவில்லை என்றாலும், இது தனக்கென சொந்த கொடி, நாணயம், மரபுகள் மற்றும் எல்லாவற்றையும் பின்பற்றி வருகிறார்கள். அத்துடன் அந்த நாட்டுக்கு என தனி ஜனாதிபதியும் இருக்கிறார்.

அந்த வகையில், மொலோசியா பற்றிய மேலதிக விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

அமைப்பு

கடந்த 1977 ஆம் ஆண்டு தான் மொலோசியாவின் கதை துவங்கியுள்ளது. கெவின் பாக் என்ற நபரும் அவரது நண்பரும் சேர்த்து அவர்களது வீட்டை ஒரு சுதந்திர நாடாக அறிவிக்க முடிவு செய்தனர்.

அவர்கள் குடியிருந்த சாதாரண அமெரிக்க வீட்டை அவர்களாகவே தனி நாடாக மாற்றியுள்ளனர்.

இப்போது வரை மொலோசியா ஒரு சிறிய நாடாக பெருமையுடன் விளங்குகிறது.

உலக வரைபடத்தில் இருக்கா?

மொலோசியா உலக வரைபடத்தில் இல்லை என்றாலும், இங்கு வருபவர்களுக்கு மொலோசியா ஒரு உண்மையான நாடு என்கிற எண்ணத்தை கொடுக்கிறது. அத்துடன் இங்கு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அங்கு இருக்க அனுமதி இல்லை.

மற்ற நாடுகளை போன்று சுற்றுலா பயணிகள் உள்ளே செல்லும் முன் அவர்களின் பாஸ்போர்ட்டில் முத்திரை பதித்து கொள்ள வேண்டும்.

குடும்ப ஆட்சி

கெவின் என்ற மனிதருக்கு கீழ் நாட்டின் ஆட்சி அனைத்தும் உள்ளது.அங்கு இருக்கும் ஒவ்வொருவரும் அவரது குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள்.

அங்கு தெருக்களை சுத்தம் செய்வது முதல் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவது வரை அனைத்தையும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து நிர்வகித்து வருகிறார்கள்.

நாட்டிலுள்ள கடை, நூலகம், தபால் நிலையம் மற்றும் கல்லறை என அனைத்து அத்தியாவசிய வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here