கிளிநொச்சி மாவட்டத்தின் குடமுருட்டி கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (29.05.2025) மணல் அகழ்வு குறித்து பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் முறைப்பாடளித்துள்ளனர்.

இதனடிப்படையில் நேற்று வியாழக்கிழமை (29.05.2025) அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பகுதிக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனால் பெருமளவான வயல் நிலங்கள், நீர்ப் பாசன கட்டுமானங்கள் என்பன சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here