அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்ட திருத்த வரைவின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான மேலதிக விசாரணையை நாளை வரை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதியரசர்கள் சிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன, சம்பத் விஜேரத்ன ஆகியோரை கொண்ட 3 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று (03) காலை முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உட்பட தரப்பினரால் 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இன்று பகிரங்க நீதிமன்றத்தில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். முன்மொழியப்பட்ட வரைவின் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நீதித்துறை அதிகாரம் ஆகியவை பறிக்கப்படும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட சட்ட வரைவை நிறைவேற்ற வேண்டுமானால் அது பொது வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்குமாறு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்கள் இன்று நிறைவடைந்தன. மேலதிக வாதங்கள் நாளை முன்வைக்கப்பட உள்ளன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here