எதிர்மறை சக்திகளை உங்களிடமிருந்து விரட்ட வேண்டுமென்றால் முன்னோர்கள் கடைபிடித்த முட்டை பரிகாரம் சிறந்தது.

முட்டைப் பரிகாரம் எவ்வாறு செய்ய வேண்டும்?

அமாவாசை நாட்களில் ஒரு முட்டையை எடுத்து அதனை உப்பு நீராலும் எலுமிச்சைச் சாறு கலந்த நீராலும் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

அப்படியே கண்களை மூடிக்கொண்டு எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலக வேண்டும் என வேண்டி தலை முதல் கால் வரை முட்டையால் தடவ வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது உடலிலிருக்கும் எதிர்மறை சக்தியெல்லாம் முட்டைக்குள் ஈர்க்கப்படும்.

இந்த முட்டையை உடைக்கும்போது, கொப்பளம்,கருப்பு புள்ளிகள் ஏதேனும் இருந்தால் எதிர்மறை சக்திகள் உங்களிடமிருந்து விலகிவிட்டது என்று அர்த்தம்.

அதேபோல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் முட்டையைப் போட்டு உறங்கச் செல்லும்போது தலைமாட்டில் மூன்று நாட்கள் வைக்க வேண்டும்.

தண்ணீரை மட்டும் மாற்றிக்கொள்ளலாம். நான்காவது நாள் அந்த முட்டையை சாக்கடையில் வீசிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் எதிர்மறை சக்திகள் நீங்கிவிடும் என்று அர்த்தம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here