இத்தாலியின் மொன்பொல்கோன் நகரில் கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நகரம் இத்தாலியின் தனித்துவமான ஒரு இன அமைப்பைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
30,000ற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட குறித்த நகரத்தில், மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டவர் எனக் குறிப்பிடப்படுகின்றது.
அவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷைச் சேர்ந்த முஸ்லிம்கள் என வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இனப்பாகுபாடு காரணமாக, மொன்பொல்கோன் நகர முதல்வரால் குறித்த பகுதியில் கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். அதனை மீறுபவர்களுக்கு எதிராக அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது.
இதன்காரணமாக குறித்த பகுதியில் உள்ளவர்கள் புறநகரங்களுக்குச் சென்று கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.








