எலன் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனம் மனித மூளைக்கும் கணினிக்குமான தொடர்பை உருவாக்கும் சிப் ஒன்றை உருவாக்கியது.
முதலில் இந்த சிப் குரங்குகளின் மூளையில் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
தற்சமயம் மனித மூளையில் சிப் பொருத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆரம்பத்தில் விபத்தொன்றில் தோள்பட்டைக்கு கீழே செயலிழந்த நபருக்கு இந்த சிப் பொருத்தப்பட்டது.
அதேபோல் தற்போது முதுகுத்தண்டு வடத்தில் காயம் ஏற்பட்ட ஒருவருக்கு இந்த சிப் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த சிப் பொருத்தப்பட்ட நபர் அசாத்திய திறன்கள் பெற்ற நபராக விளங்குவார் என்று எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, இந்த சிப் மிகவும் பாதுகாப்பானது எதிர்காலத்தில் இன்னும் சிலருக்கு இந்த சிப் பொருத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.








