ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் ஒன்பது புதிய மாகாண ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சற்று முன்னர் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் விவரம் வருமாறு:

மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் சரத் அபேகோன் (முன்னாள் துணைவேந்தர், பேராதனைப் பல்கலைக்கழகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மாகாண ஆளுநராக  பந்துல ஹரிச்சந்திர (முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாணம் ஆளுநராக  நாகலிங்கம் வேதநாயகம் (யாழ்ப்பாணத்தின் முன்னாள் அரசாங்க அதிபர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாணம் ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here