யாழ்ப்பாணத்தில் அனுமதிப் பத்திரங்களின்றி மணல் மற்றும் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அவ்வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாணம் – மன்னார் நெடுஞ்சாலை வழியாக தொடர்ச்சியாக மணல் மற்றும் மரக்குற்றிகள் டிப்பர் வாகனங்களில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதனையடுத்து நேற்றைய தினம் (29.08) கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களை பொலிஸ் நிலையங்களில் நிறுத்தி வைத்துள்ள பொலிஸார், அதன் சாரதிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.








