இயற்கையாகவே பாகற்காயில் கசப்பு தன்மை இருக்கிறது. இதனால் பலர் இதனை விரும்பி உண்ண மாட்டார்கள்.
ஆனால் பாகற்காயில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன.
கசப்பே இல்லாமல் சுவையான பாகற்காய் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • பாகற்காய்- 2
  • இஞ்சி பேஸ்ட் – 1 ஸ்பூன்
  • பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
  • மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
  • கரம் மசாலா- ½ ஸ்பூன்
  • சீரக பொடி -½ ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • கடலை மா- ¼ கப்
  • அரிசி மா- 2 ஸ்பூன்
  • கார்ன் பிளவர்- 1 ஸ்பூன்
  • எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

முதலில் பாகற்காயை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் இட்டு 1 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து அதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி ¼ மணி நேரம் அப்படியே வைக்கவும்.

அடுத்து தண்ணீரை வடித்து பாகற்காயை மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவேண்டும்.

பின்பு பாகற்காயில் இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா,  சீரக பொடி, கடலை மா, அரிசி மா, கோர்ன் பிளவர், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

பின் ஒரு சட்டியில் எண்ணெய் இட்டு சூடானதும், கலந்து வைத்துள்ள பாகற்காயை பொறித்து எடுத்தால் கசப்பே இல்லாத சுவையான மொறுமொறு பாகற்காய் வறுவல் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here