நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (27) விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.

இந்த கஜமுத்துக்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெலிஓயா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.

சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here