கனமழை காரணமாக ராஜங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகளும் மற்றும் அங்கமுவ குளத்தின் இரண்டு வான்கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அப்பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளது. இதனால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்த்தேக்கங்களின் கீழ் பாயும் ஆறுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.








