புத்தளம் புதிய எலுவாங்குளம் ஐலிய கிராமத்தில் இன்று (17) அதிகாலை 2 மணியளவில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் முந்தல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனவும் அவர் தோட்டமொன்றின் காவலாளியாக கடமை புரிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த மரணம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.







