காலி – கோட்டை வீதியில் காலி நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி நகரத்தை நோக்கிப் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த நான்கு பெண்கள் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது படுகாயமடைந்த நான்கு பெண்களும் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மத்துகம பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here