கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவின் கட்டைக்காட்டு பகுதியில் கடந்த 04.03.2025 அன்று குடும்பம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் இதுவரையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்தவாரம் ஒருவரும் நேற்றுமுன் தினம் (15.03.2025) பிரபல யூரியூபர் மற்றும் அவரது மனைவி உள்ளடங்களாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றைய தினம் (16.03.2025) கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








