குருணாகல் , உடபதலவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

குருணாகல் , உடபதலவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவர்கள் சிலர் கடந்த 29 ஆம் திகதி அன்று பாடசாலைக்கு முன்பாக தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தகராறின் போது, பேப்பர் கட்டர் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நான்கு மாணவர்கள்  குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் மாணவன் ஒருவன் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here