சீனாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவான அனிமேஷன் திரைப்படமான ‘நியூ லாய்’ (Niu Lai) தற்போது எதிர்பாராத வகையில் பொக்ஸ் ஒபிஸில் கவனம் ஈர்த்து வருகிறது. சுமார் 3 லட்சம் இலங்கை ரூபாவில் இரண்டு பேர் (Xin Yumeng மற்றும் Sun Lifang) இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி உள்ளனர்.
கடந்த ஒகஸ்ட் 5-ம் திகதி சீனாவில் வெளியான ‘நியூ லாய்’ திரைப்படம் ஆரம்பத்தில் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. முதல் 10 நாட்களில் 300-க்கும் குறைவான பார்வையாளர்களே டிக்கெட் பெற்றதாக கூறப்படுகிறது.
படத்துக்கு மோசமான விமர்சனங்கள் வெளியான நிலையில் அதுவே அதற்கு விளம்பரமாக மாறியது.அதன் பின்னர் மக்கள் அதில் என்ன தான் இருக்கிறது என்ற மனநிலையில் பார்க்க சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக ‘நியூ லாய்’ படத்தின் வசூல் திடீரென அதிகரித்துள்ளது. சீன பொக்ஸ் ஒபிஸில் தரவுகளின்படி, படம் தற்போது 14.9 மில்லியன் யுவானுக்கும் அதிகமாக, இலங்கை மதிப்பில் சுமார் ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தற்போது சீன பொக்ஸ் ஒபிஸில் பெரிய ஹோலிவுட் படங்களான ‘ஸ்பைடர் மேன் பிராண்ட் நியு டே’ மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ ஆகியவற்றுடன் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.








