திரையுலகின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் சினிமாத்துறையில் 51 வருடங்களை எட்டியுள்ளார்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். ”அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் 1975-ம் ஆண்டு ஒகஸ்ட் 15-ந் திகதி வெளியானது.

கடந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 171 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்த் தனது 75 வயதிலும் உச்சத்தில் இருக்கும் நடிகராக வலம் வருகிறார்.

அவர், இருமுறை பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173 வது திரைப்படமான தர்மன் படத்தில் நடித்து வருகிறார்.

இதன்போது படக்குவினருடன் இணைந்து அவரது சினிமா வாழ்வின் 51 வது வருடத்தை இன்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here