46,460,000 ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையை நாட்டிற்கு கொண்டு வந்த வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முற்பட்ட போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (21) அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய மியான்மார் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார், அவர் அந்நாட்டில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்த சந்தேக நபர் இன்று அதிகாலை 01.45 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து தாய் ஏர்வேஸின் TG-307 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு அவர் கொண்டு வந்த பயணப் பைகளில் ஆடைகள், இனிப்புகள் மற்றும் உணவுகளுக்கு மத்தியில் 04 கிலோ 646 கிராம் குஷ் போதைப்பொருளை 03 பொதிகளில் மறைத்து கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக விமானப் பயணியும் அவர் கொண்டு வந்த குஷ் போதைப்பொருள் தொகையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் பிரிவு தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here