சுங்க வரி செலுத்தாது 775 கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வந்ததாகக் கூறி மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, கொட்டாஞ்சேனை ஆர்மர் வீதி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வெள்ளிக்கிழமை (16) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
சட்டவிரோத தங்கம் தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
30, 45 மற்றும் 50 வயதுடைய சந்தேகநபர்கள் தங்கத்துடன் கைது செய்யப்பட்டனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








