இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வாகன உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் ஒன்றை வைத்திருந்த 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (29) இரவு, மேல் மாகாணத்தின் தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கொட்டாவ பொலிஸ் பகுதியில் நடத்திய சோதனையின் போது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன பாகங்களைக் கொண்டு அந்த ஜீப் தயாரிக்கப்பட்டதாகவும், செல்லுபடியாகும் வருவாய் உரிமம், காப்பீட்டுச் சான்றிதழ் அல்லது புகை உமிழ்வு சோதனை அறிக்கை இன்றி அது இயக்கப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் குறித்த சந்தேக நபர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வித்தாரந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுவதோடு இது தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here