சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-32 வீதியூடாக சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர் வாகனங்களை (14.12.2024) சனிக்கிழமை சாவகச்சேரிப் பொலிஸார் கைப்பற்றியிருப்பதுடன் அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

அனுமதிப்பத்திர மணலை மேலே பரவி அதன் கீழாக வெள்ளை மணலை கடத்திச் சென்ற டிப்பர் வாகனங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here