மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வந்தபோதிலும், பொருளாதார மற்றும் சமூக நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக இலங்கை அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் இலங்கைக்கான பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. நாட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்பு, அவர்கள் இன்று பிற்பகல் (30) இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம்,இலங்கைக்கான நிதி வசதியின்7வது மறுஆய்வு குறித்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் மேலும் கூறினார்.
பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே இலங்கையின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான சீர்திருத்தச் செயல்முறைக்குத் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், மத்திய கிழக்கில் உள்ள மோதல்கள் தொடர்பாக இலங்கை இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மிகவும் பொருத்தமானவை என்றும் அவர் தெரிவித்தார்.








