சனி பகவான், அதன் சொந்த ராசியான கும்பத்தை விட்டு வெளியேறி மீன ராசிக்குச் செல்கிறார்.

29 மார்ச் 2025 சனி பகவான் மீனத்துக்கு மாறுகிறார். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் இருப்பதால் ஷஷ ராஜயோகம் உருவாகும். அதேபோல் கும்ப ராசியை விட்டு வெளியேறும் போதும் சில ராசிகளுக்கு வரங்களை தந்து செல்வார்.

அந்த வகையில் எந்தெந்த ராசியினர் பலன் பெறுவர் என்று பார்ப்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சொந்த வீடு வாங்குவீர்கள். வாழ்க்கையைப் பற்றிய சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள். வருமானம் நன்றாக வரும்.

துலாம்

சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பதவி, கௌரவம் போன்றவை அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடங்களில் ஜொலிப்பீர்கள்.

மகரம்

கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண வாழ்வில் முரண்பாடுகள் முடிவுக்கு வரும்.

கும்பம்

அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். நிதி நிலை உயர்வடையும். வியாபாரம் செழிக்கும். முன்னேற்றம் ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here