மன்னார் முசலி பிரதேசத்தில் லைகாவின் ஞானம் அறக்கட்டளையால் முன்னெடுக்கப்பட்ட சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம்    இன்றைய தினம் புதன்கிழமை(09.10) மக்களின் பாவனைக்காக கையளித்துள்ளனர்.

பிரதான விருந்தினராக கலந்து கொண்ட முசலி பிரதேசச் செயலாளர் ரஜீவ் குறித்த குடிநீர் திட்டத்தை திறந்து வைத்து மக்களின் பாவனைக்காக கையளித்தார்.

முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்டச்சிக்குடா,கொக்குப்படையான் கிராம மக்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சுத்தமான குடி நீர் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமது கிராமத்தில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு குறித்த கிராமத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புகள் ஊடாக லைகாவின் ஞானம் அறக்கட்டளையிடம் கோரிக்கையை முன் வைத்தனர்.

குறித்த கோரிக்கைக்கு அமைவாக மன்னாரில் உள்ள லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் பணியாளர்கள் ஊடாக குறித்த கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம் அமைக்கப்பட்டது.என எமது பிராந்திய  செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here