தென் கொரியாவில் உள்ள சம்சுங் இலக்ட்ரோனிக்ஸ் தொழிற்சங்க ஊழியர்கள் கால வரையறை இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டுகோள் விடுத்து கிட்டத்தட்ட 30,000 ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமையிலிருந்து 3 நாள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

சம்சுங் இலக்ட்ரோனிக்ஸ் நிர்வாகம் இதுவரை எந்தவிதச் சமரசப் பேச்சையும் நடத்தாததால் கால வரையறை இன்றிப் போராட்டத்தைத் தொடரப் போவதாக ஊழியர்கள் அறிவித்தனர்.

உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர். எனினும் சம்சுங் நிறுவனம் உற்பத்தியில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

ஊழியர்களின் போராட்டம் குறித்து நிறுவனம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here