முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் அவரை கைது செய்வதற்கு முன்னர் அவரது வீட்டில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல்களின்படி, அரச வங்கி ஒன்றிலிருந்து ரூ. 10 மில்லியனை பெற்று மோசடி, ஊழல் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.








