மொனராகலையில் உள்ள சிறுவர் காப்பகத்திலிருந்து இரு சிறுவர்கள் தப்பியோடியுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு தப்பியோடியுள்ளனர்.
குறித்த சிறுவர்கள் மதுருகெட்டிய மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில் குறித்த இரு சிறுவர்களும் நேற்று (19) பாடசாலைக்கு சென்று மீண்டும் சிறுவர் காப்பகத்திற்கு திரும்பவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








