அபாயகரமான கழிவுகளால் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துபவர்களுக்கு 20 மில்லியன் ரூபாய் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்க சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களை அழிப்பவர்களுக்கு 1 மில்லியன் ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜாதிக நாமல் உயனவின் 36வது ஆண்டு விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இதேநேரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here