நாவலப்பிட்டி நகரபிதாவின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நபர் ஒருவரை தாக்கியதாகக் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகன விபத்தைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்ட பின்னர் குறித்த தாக்குதல் நடந்துள்ளது, பின்னர் அது உடல் ரீதியான மோதலாக மாறியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேயரின் மகன் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு சந்தேக நபர்களும் இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here