ஜனாதிபதி ஊடக விருதுகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நவம்பர் 05 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் சிறந்த ஊடகக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஊடகவியலாளர்களின் பணியை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சினால் இரண்டாவது முறையாக நடத்தப்படும் ஜனாதிபதி ஊடக விருதுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 2024.10.30 என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 05ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை 2024 நவம்பர் மாதம் 05ஆம் திகதி பிற்பகல் 4.00 மணி வரை சமர்ப்பிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here