ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

இதற்கமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சீவரத்திற்கு நீதி – சுதந்திர நடைபயணத்தில் வந்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் இப்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வீதியில் தங்கியுள்ளனர்.

நேற்று (15) மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்த மகா சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினர் ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உறுதியான பதில் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதன்படி குழுவினர் இரவு முழுவதும் தொடர்ந்தும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மகா சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here