ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் அதர்வா முரளி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் ‘இதயம் முரளி’ படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும்படியான நடிகரான அதர்வா அண்மையில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்லதொரு வரவேற்பைப் பெற்றார். தற்போது அவர் ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதர்வாவின் தந்தையான மறைந்த பிரபல நடிகரான முரளியை அவரது ரசிகர்கர்கள் ‘இதயம் முரளி’ என அழைத்து வந்த நிலையில் அந்த பெயரையே இப்படத்திற்கு சூட்டியுள்ளமை மக்களிடையே பெரிதளவில் கவனம் பெற்றுள்ளது.
முரளி நடித்த ‘இதயம்’ தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படமாகும்.








