தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் முன்னர் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்காலத்தில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (11) பிற்பகல் இப்பாகமுவ பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியில் உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கங்களால் தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட சில நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தங்கள் காரணமாக, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நெகிழ்வுத்தன்மையுடன் விலையை நிர்ணயிப்பதற்கும் சந்தையை கட்டுப்படுத்துவதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளன.
தனியார் நிறுவனங்களின் விருப்பப்படி மாத்திரம் செயல்பட அனுமதிக்காது, நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் எரிபொருள் விலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இருந்த நிலையில் இருந்து மீட்கப்பட்டு ஏற்கனவே இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு சுமையாக இல்லாத வகையில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் மேலும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.








