சர்வஜன பலய கட்சியிலிருந்து கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராகப் போட்டியிட தொழிலதிபர் ஹசன் அலால்தீன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தெஹிவளை பகுதியில் நேற்று (21) பிற்பகல் நடைபெற்ற முஸ்லிம் பக்தர்களுக்கான இப்தார் நிகழ்வில் இது அறிவிக்கப்பட்டது.

திரு. ஹசன் அலால்தீன் முன்னர் சர்வஜன பலய நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், ஊடகச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிகழ்வில் சர்வஜன பலய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர, முன்னாள் அமைச்சர்கள் சன்ன ஜெயசுமன, அலி சப்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here